-
நன்கொடைகளை சரியான வழியில் செலுத்துங்கள்: அரசாங்கம் வேண்டுகோள்.
அனர்த்த முகாமைத்துவ மையம், மாவட்ட அனர்த்தக் குழுக்கள் மற்றும் பிராந்திய அனர்த்தக் குழுக்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான முறையான பொறிமுறை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதால், அரசாங்கம் பொதுமக்களை அந்த பொறிமுறையைப் பயன்படுத்துமாறும், கடத்தல்காரர்களால் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை விநியோகிக்கும்போது…
-
இலங்கையின் அவசர நிதி கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முன்னுரிமை!
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து நாடு எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க, இலங்கை விடுத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் விரைவான நிதி (RFI) கோரிக்கைக்கு முன்னுரிமை அளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முடிவு செய்துள்ளது. அவசர நிதியுதவிக்கான இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையை…
-
சீரற்ற வானிலையால் சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார். அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக…
-
காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தினமும் மீறுகிறது: துருக்கி, எகிப்து குற்றச்சாட்டு.
காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தபோதும், அங்கே போர் மேகங்கள் முழுமையாக விலகவில்லை. துப்பாக்கிச்சூடும், குண்டு வீச்சும் அன்றாட நிகழ்வாகவே தொடர்கின்றன. இந்த விவகாரத்தில் இஸ்ரேல் மீது துருக்கி மற்றும் எகிப்து நாடுகள் கடுமையாக குற்றம் சாட்டி உள்ளன. கத்தார் தலைநகர்…
-
பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால் 1926 என்ற இலக்கத்தை அழைக்கவும்!
பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் சிறுவர் மற்றும் இளம் பருவ மனநல மருத்துவ நிபுணரான…
-
கண்டி- கொழும்பு பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை
இயற்கை அனர்த்தங்களின் பின்னர் கொழும்பு மற்றும் கண்டிக்கிடையிலான பொது போக்குவரத்து சேவைகளை, இன்று (08) திங்கட்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் கண்டியிலிருந்து ரயில் மூலம் கொழும்புக்கு தொழில் நிமித்தம் இதுவரை காலம் வருகை தந்த நபர்களின்…
-
இன்றிரவு முதல் வடக்கு, கிழக்கு, வடமத்தியில் மழை அதிகரிக்கும் சாத்தியம்
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (08) இரவு முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா,…
-
அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய…
-
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.
டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது. இதேவேளை, 950 தொன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிவாரணப் பொருட்களை தாங்கி…
-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தான அறிவிப்பை தேசிய அனர்த்த நிவாரண மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் மாவட்ட மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த நிவாரணம்…








