-
அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.
நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவிக்கையில், சேதமடைந்த வாகனங்கள் தொடர்பான…
-
பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்
பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத் அன்வர் சௌத்ரி இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ளார். அமைச்சர் மொஹமட் ஜுனைத் இன்று செவ்வாய்க்கிழமை (09) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். இலங்கை-பாகிஸ்தான் சுதந்திரமடைந்த…
-
பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.
மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இன்று (09) நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00 மணிவரையில் அமுலில் இருக்கும். மேற்குறித்த இடங்களில் மின்னல், இடியுடன் கூடிய மழை…
-
ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமரா: உரிமையாளர் கைது!
மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் அந்நிலையத்தின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸாருக்கு…
-
அனர்த்த நிவாரணத்திற்காக பூட்டானின் நிதி உதவி
பூட்டான் இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர், கர்மா ஹமு டோர்ஜி (H E Karma Hamu Dorjee) அவர்கள் அண்மைய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாக, பூட்டான் அரசாங்கத்தின் சார்பாக USD 200,000 (இரண்டு இலட்சம் அமெரிக்க…
-
பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் மழை
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைகொண்டு வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (09) இரவு முதல் நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு…
-
பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை
அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக, ஹஜ் குழுவிடமிருந்து ரூ.5 மில்லியன் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இன்று (08) முற்பகல் ரூ. 5 மில்லியன் நன்கொடையை புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சிடம் ஹஜ் குழு வழங்கியுள்ளது. இந்த…
-
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு
இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தமிழகத்தைச் சேர்ந்த வானிலை முன்னறிவிப்பாளர் செல்வக்குமார் தன் யூடியூப் தளத்தில் தெரிவித்தார். செல்வக்குமார் கூறியதாவது, வங்காள விரிகுடாவில் காணப்படும் வளிமண்டல மேகம் இந்த வாரம் ஒரு…
-
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!
மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் தாக்கத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் 11.00…
-
பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!
அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர நிவாரணத் திட்டத்தின் கீழ், பேரிடரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தொழில்துறைக்கும் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்க உதவும் வகையில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு ரூ.200,000 வழங்க முடிவு செய்துள்ளது. அமைச்சில்…









