ஆடை விற்பனை நிலையத்தில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமரா: உரிமையாளர் கைது!

Date:

மஹரகம – தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள்  ஆடை மாற்றும் அறையில் சிசிரிவி கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் அந்நிலையத்தின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள் பெண்கள், சிறுமிகள் மற்றும் யுவதிகள் உள்ளிட்ட பலர் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தாரா அல்லது வேறு எவருக்கேனும் விற்பனை செய்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Popular

More like this
Related

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட்  இரத்த அழுத்தக்...

“இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே பலத்த கூட்டாளி டிரம்ப் மட்டுமே”: டிரம்ப் – ஈரான் ஒப்பந்தத்தை விமர்சிக்க வேண்டாம் என ஜே.டி. வான்ஸ் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் மேற்கொண்டுள்ள சமாதான ஒப்பந்தத்தைப் பகிரங்கமாக...