சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக அண்ட்ராய்ட் இரத்த அழுத்தக் கருவி (Android Blood Pressure) மற்றும் டிஜிட்டல் எடை அளவி (Digital Weighing Scale)ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (18) பிற்பகல் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேசிய சமாதான பேரவையின் PAIRS குழுவினர், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்போடு இணைந்து இச் சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
சிலாபம் மாவட்ட பொதுத் தள வைத்தியசாலையின் பாவனைக்காக வழங்கப்பட்ட இந்த உபகரணங்களை வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர், குழுவினரிடமிருந்து உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கையின் 16 மாவட்டங்களில் சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்பும் நோக்கில் பரவலாகப் பணியாற்றி வருகின்ற தேசிய சமாதான பேரவையின் சார்பில் அதன் இணைப்பதிகாரிகளான திருமதி. ஜசானியா மற்றும் திருமதி நிரோஷா அண்டனி, சர்வமத அமைப்பின் சார்பில் அஷ்ஷேக் M.S அப்துல் முஜீப், அருட்சகோதரி இமாத் மேரி, பாஸ்டர் அல்பிரட் ராஜ், ஓய்வுபெற்ற ஆசிரியர் நஸீர், திரு. குமார மற்றும் இணைப்பதிகாரி திருமதி. முஸ்னியா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

