-
எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை!
நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (30) ஊவா, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…
-
மாலைதீவின் அரச பிரதானிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர். அதன்படி, மாலைதீவு பிரதி சபாநாயகர் அகமத் நஸீம் (Ahmed Nazim), வெளியுறவு அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல்…
-
ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு
பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (29) நள்ளிரவு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த ரயில்வே வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த ரயில்வே தொழிற்சங்க அதிகாரிகளுக்கும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
நீதிமன்றில் சரணடைந்த நாமலுக்கு பிணை
நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை…
-
இலங்கைக்கும்,மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம்; ஜனாதிபதி அநுர உறுதி!
இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தி, எதிர்காலத்தில் இலங்கையும் மாலைதீவும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமல்லாமல், பொதுவான தொலைநோக்குப் பார்வையாலும் பொதுவான நோக்கத்தாலும் ஒன்றுபட்ட பங்காளிகளாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட்…
-
சைப்பிரஸில் இலங்கை தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம்; புதிய கொன்சுலர் ஜெனரலாக யூ.எல் நியாஸ் பதவியேற்றார்
சைப்பிரஸில் உள்ள நிக்கோசியாவில் இலங்கை பொது தூதரகம் தனது செயல்பாடுகளை மீளவும் தொடங்கியதை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் தூதரகப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய பொது தூதராக நியமிக்கப்பட்டுள்ள யு.எல். நியாஸ் ஜூலை 21 அன்று நிக்கோசியாவில் தனது பணிகளைப் பொறுப்பேற்றார். ஜூலை 22…
-
‘Killing the travellers’: குருக்கள் மடம் ஆவணப்பட திரையிடலும் கலந்துரையாடலும்!
இலங்கையில் நடந்த மிகப் முக்கிய மனிதப் படுகொலைச் சம்பவமான குருக்கள் மடம் படுகொலை தொடர்பில் எடுக்கப்பட்ட ‘பயணிகளைக் கொல்லுதல்’ (Killing the travellers)ஆவணப்படத்தின் திரையிடலும் கலந்துரையாடலும் நாளை (30) மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன…
-
நியூயார்க் மான்ஹாட்டன் அலுவலக கட்டடத்தில் பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் சுட்டுக்கொலை: தன்னைத்தானே சுட்டு கொலையாளியும் தற்கொலை!
நியூயார்க் மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் மான்ஹாட்டனில் 44 மாடி கொண்ட வணிக வளாகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்காத உடை அணிந்துவந்து சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார்.…
-
முன்னாள் உயர் அரசு அதிகாரிகளின் கைதுகள்: குற்றப்புலனாய்வுத் துறை தீவிர விசாரணை!
குற்றப் புலனாய்வுத் துறை (CID) நடத்திய தனித்தனி விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் உயர் அரசு அதிகாரிகளான இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் (ஓய்வு பெற்ற) நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
-
யட்டிநுவர பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு!
யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த…









