Thursday, November 26, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. சர்வதேச கட்டுரைகள்

    வரலாற்றின் துயரமிகு வடுக்கள்: ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம் இன்று!

    இன்று, ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம். இந்தப் படுகொலை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான படுகொலையாகும். போஸ்னியாவில் கொடூரமான ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலையின் 30 வது ஆண்டு நினைவு தினத்தினை ஜூலை 11 அன்று அனுசரிக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும்…

  2. உள்ளூர்

    இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை வழங்கத் தீர்மானம்!

    அமெரிக்க நன்கொடையாளர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை இலங்கைக்கு வழங்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஒப்புக்கொண்டுள்ளார். இலங்கையின் சுகாதாரத்துறை முன்னேற்றம் மற்றும் ஊடக துறையின் மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (10) சுகாதார மற்றும்…

  3. உலகம்

    ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 8 சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 போ் உயிரிழப்பு.

    மத்திய காஸாவின் டெய்ர் அல்-பாலா நகரிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் பட்டினியால் உடல் நலம் குன்றியவா்களுக்கு ஊட்டச்சத்து மருந்து வாங்குவதற்காக வரிசையில் நின்றவா்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எட்டு சிறுவா்கள் இரண்டு பெண்கள் உள்பட 15 போ் உயிரிழந்தனா். மேலும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த…

  4. உள்ளூர்

    சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்: 237,026 மாணவர்கள் A/L தகுதி:13,392 மாணவர்கள் 9 ‘A’ சித்திகள்

    2024 ஆம் ஆண்டுO/L பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் A/L இற்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்தார். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை…

  5. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…

  6. உள்ளூர்

    க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டன

    2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் பரீட்சை முடிவுகளைப் பெறலாம். 2024 ஆம் ஆண்டுக்கான…

  7. உள்ளூர்

    ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் கருதி விசேட நடவடிக்கை

    ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி…

  8. உள்ளூர்

    ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும் நூல் வெளியீட்டு விழா

    சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய "ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்" என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. செயற்பாட்டாளர் எஸ். சிவகுருநாதன் தலைமையில் நடைபெறும்…

  9. உள்ளூர்

    ட்ரம்பின் 30% வரி அறிவிப்பை அடுத்து ஜனாதிபதி தலைமையில் ஆலோசனை!

    அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% சுங்க வரி (reciprocal…

  10. உள்ளூர்

    பால் தேநீரின் விலை அதிகரிப்பு !

    பால் தேநீரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 100 ரூபாவாலும்,  ஒரு  கிலோ பால்மா  பொதியின்…