-
இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி!
அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர…
-
இறக்குமதி பால்மா விலைகள் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியின் விலை ரூ. 100 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் பால் மா பொதியின் விலை ரூ. 250 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
-
நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை
இன்றையதினம் (10) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு…
-
இஸ்ரேலுக்கு எதிரான பதிவை share பண்ணிய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு 9 மாதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஸுஹைல் குற்றமற்றவர் என நீதிமன்றால் விடுவிப்பு
இன்று (09) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைல் எந்தவிதக் குற்றமும் இழைக்கவில்லை என்றும், அவரை பிணையில் விடுதலை செய்ய எந்த…
-
வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை: நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள்
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. வரட்சியான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதுடன், கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் அதிகளவில்…
-
சிறைச்சாலை ஆணையாளர் துஷாரவிற்கு பிணை: நாட்டில் உள்ள சிறைச்சாலைகளுக்குள் நுழைய தடை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவிப்பதற்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது…
-
செம்மணியில் இதுவரை 56 என்புத் தொகுதிகள் மீட்பு
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்று (08) இடம்பெற்ற அகழ்வின் போது 4 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி…
-
அறுகம்பை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!
அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம்,…
-
தேசிய மக்கள் சக்தி எம்.பியாக பதவியேற்ற நிஷாந்த ஜயவீர!
தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக யூ.டி. நிஷாந்த ஜயவீர சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற இடத்தை நிரப்ப ஜெயவீர எம்.பி.யாக பதவியேற்றார். தேசியப் பட்டியல்…
-
பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்களை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும்…








