-
நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்…!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல்…
-
டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் பாடசாலை மாணவர்கள்: சுகாதார அமைச்சு
மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகக் கல்வியமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான டெங்கு நோயாளர்களில் அதிகளவானோர் 5 முதல் 19 வயதுக்கு…
-
வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய 02 மாதங்களில் பேருந்துகளில் AI உபகரணங்கள்!
வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த நீண்ட தூர பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) உபகரணங்கள் பொருத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், அடுத்த இரண்டு…
-
இலங்கையில் அரசாங்கத்தின் அனுமதியுடன் 2 இஸ்ரேல் கலாசார நிலையங்கள்: அமைச்சர் சுனில் செனவி
இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன,…
-
பேராதனை பல்கலையில் நடைபெறவுள்ள தமிழியல் ஆய்வு மாநாடு
பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறையின் 09 ஆவது சர்வதேச தமிழியல் மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(06) பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்க மண்டபத்தில் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் சிறி .பிரசாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. அத்துடன் இந்த ஆய்வு மாநாடு ஐந்து அமர்வுகளாக நடைபெறவுள்ளது. பல்வேறு துறை…
-
தேசிய ஒற்றுமையை உருவாக்க சுற்றாடலைப் பயன்படுத்த முடியும்: உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கேகாலையில் இன்று (05) முற்பகல் நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்து கொண்டார். “பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்” முக்கிய கருப்பொருளை முதன்மைப்படுத்தி “துளிர்விட இடமளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முறை உலக…
-
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகமான திருப்பம்: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு
புதன், ஜூன் 4, 2025 அன்று பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி (Royal Challengers Bengaluru) அணியின் முதலாவது IPL வெற்றியை கொண்டாட வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர்…
-
பிராணிகளின் விலை அதிகம் : தேச நலனை முன்னிறுத்தி குர்பானியை இடைநிறுத்திய மொரோக்கோ அரசு
இம்முறை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பிராணிகளை குர்பான் கொடுப்பதை நிறுத்துமாறு மொரோக்கோ அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மொரோக்கோவில் 7ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. மொரோக்கோவில் குர்பானிக்கான பிராணிகளில் பிரதானமானதாக செம்மறியாடுகளே காணப்படுகின்றன. கடந்த 7 வருடங்களாக நிலவி வரும் வறட்சியான காலநிலையினால்…
-
மோசமான காலநிலையால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடுகள்
நாட்டில்,கடந்த சில தினங்களாகப் பெய்த கடும் மழை மற்றும் கடுமையாக வீசிய காற்று என்பவற்றால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக விவசாயிகள் காப்பீட்டு சபை மதிப்பீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளது. நெல், சோளம், உருளைக்கிழங்கு, வெங்காயம், போஞ்சி மற்றும் பச்சை மிளகாய்…
-
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தனியாளாக நின்று வீட்டோவை பயன்படுத்தி ரத்து செய்தது அமெரிக்கா
காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே உடனடியாக நிபந்தனையின்றி நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை அமெரிக்கா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்திருக்கிறது. பணயக் கைதிகளை விடுவிப்பதை பற்றி இந்த தீர்மானம்…









