-
பரீட்சை திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்!
மே 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் என்பன நாளை செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை காலப்பகுதியில், பாடங்கள் தொடர்பான குறிப்புக்கள்,பாட விரிவுரை,…
-
ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!
இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிபிசி, ஊடகவியலாளர் அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை…
-
தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்
ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அதனை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களும் ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்…
-
புகைத்தலுக்காக 52 கோடியை செலவிடும் இலங்கை மக்கள்!
நாட்டில் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாயை மக்கள் புகைப்பிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், அவற்றில் புகைபிடித்தல் முக்கிய காரணங்களில் ஒன்றெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக நாளொன்றுக்கு …
-
நாட்டில் நூற்றுக்கு 10 வீதமானோர் சிறுநீரக நோயால் பாதிப்பு
நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் வைத்தியர் சஞ்சய ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையரின் தற்போதைய தெரிவு தேசிய மக்கள் சக்தியே: சுவீடனில் அனுர
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட அனுரகுமார திஸாநாயக்க, இம்முறை அவர்களின் தெரிவாக தேசிய மக்கள் சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். சுவீடனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார திஸாநாயக்க…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று இணையும் மண்டலத்தினால் நாட்டின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் (29) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…
-
சவூதி அரேபியாவில் ஆரம்பமாகியுள்ள உலக பொருளாதார மன்ற உச்சி மாநாடு
உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் இன்றும் ( 28) நாளையும் ( 29) நடைபெறுகிறது. சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது…
-
முடிவுக்கு வருமா காசா போர்? நெதன்யாகுவை கைது செய்ய திட்டம்!
பலஸ்தீனம் மீதான போரில் ஏராளமான விதி மீறல்கள் நடந்திருப்பதாகவும், இந்த போரே தேவையற்றது எனவும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும்…
-
174 வருடங்களில் பதிவாகாத அளவில் புவியின் வெப்பநிலை அதிகரிப்பு!
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அளவில் இந்த வருடத்தில் புவியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு…