இலங்கைக்கு கடத்த இருந்த 30 கிலோ மூக்குபொடி பொதிகள் பறிமுதல் | மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை

Date:

தமிழகத்தின் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த இருந்த 30 கிலோ மூக்குப் பொடி பொதிகள் மண்டபம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை குயவன் தோப்பு பகுதியில் இருந்து இலங்கைக்கு மூக்கு பொடி பண்டல்கள் கடத்த இருப்பதாக ராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேசத்தின் கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நாட்டுப்படகு ஒன்றை சோதனை செய்ய முற்பட்டபோது கடத்தல் காரர்கள் இரண்டு பண்டல்களை கடற்கரையில் தூக்கி வீசி விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பொதிகள் இரண்டிரும் 100 அட்டைபெட்டிகளில் சுமார் 30 கிலோ மூக்கு பொடிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறிதத் கடத்தல்காரர்கள் தொடர்பாக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்தள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...