பொலிஸாரின் விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில்  ஐந்து இளைஞர்கள் கைது

Date:

வவுனியாவில்  நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட  விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா  பொலிஸாரினால் நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை வவுனியாவில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தமது உடமையில் கஞ்சா பொதிகளுடன் நடமாடிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள்  20, 21, 21, 22, 31 வயதினை உடைய  மகாரம்பைக்குளம், பூந்தோட்டம்,  மதகுவைத்தகுளம் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களின் உடமையிலிருந்து 8740 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடமும்  கஞ்சா எப்படி, எங்கிருந்து வந்ததென விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையின் பின்னர் ஐவரையும் நீதிமன்றில்  முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .
வவுனியா நிருபர்

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...