முக கவசம் அணியாமல் நடமாடிய 57 பேர் பொலிசாரிடம் சிக்கினர்

Date:

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் முக கவசம் அணியாமல் நடமாடிய 57 நபர்கள் பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
நேற்று(23) மாலை காத்தான்குடியின் முக்கிய வீதிகளில் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.பெருமளவிலான பொலிசார் இத்தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

முகக்கவசம் அணியாதோர் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நடவடிக்கையில்  காத்தான்குடி பொலிசார் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் பணிப்பின் பேரில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் தலைமையில் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.
காத்தான்குடி குட்வின் சந்தி மற்றும் காத்தான்குடி பிரதான வீதிஇ கடற்கரை வீதி உட்பட பல இடங்களில் பொலிசார் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
முக கவசம் அணியாமல் வீதியில் சென்றவர்கள் மற்றும் வாகனத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களின் பெயர் அவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் முகவரி என்பன பதிவு செய்யப்பட்டதுடன் சுகதார நடைமுறைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு பொலிசாரினால் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து இதன் போது பொலிசார் அறிவுறுத்தினர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு  நிருபர்

Popular

More like this
Related

பல பிரதேசங்களில் மழைக்கு வாய்ப்பு!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...