ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடல்

Date:

ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்திற்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்குமிடைலான ஒன்றுகூடலொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை(21) ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலில் அதன் நிர்வாக சபை தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் செயலாளர் அப்துற்றஹ்மான் (நளீமி) அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து ஹொரவ்பொத்தான பஷார் பள்ளிவாசலின் தலைவர் தேசமான்ய, தேசகீர்த்தி A.M.A சியாம் ஹாஜியார் அவர்கள் தலைமை உரை நிகத்தினார்.
இதனையடுத்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் நிம்ஷாத் ஒன்றுகூடலின் முக்கியத்துவம் பற்றி தெளிவுபடுத்தினார். அஹதிய்யா பாடசாலைகளை மஸ்ஜித்களில் ஆரம்பித்தல், பதிவு செய்யப்படாத மஸ்ஜித் நிருவாகிகளை பதிவு செய்தல், பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களை பதிவு செய்து கொள்ளல் போன்ற விடயங்களை அவர் தெளிவு படுத்தினார்.
குறித்த கூட்டத்தில் ஹொரவ்பொத்தான மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், ஹொரவ்பொத்தான ஜம்மிய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் மற்றும் ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதேச பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
முஹம்மட் ஹாசில் 

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...