இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர் | விமான நிலையத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் ஆரம்பம்

Date:

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று இலங்கை வருகைத்தர உள்ளார்.

விமான நிலையத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாகிஸ்தான் பிரதமர் தலைமையிலான தூதுக் குழுவை வரவேற்கவுள்ளார்.

அதனையடுத்து விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமருக்கு கௌரவமளிக்கும் வகையில் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் இரண்டு தினங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

பிரதமருடனான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையையடுத்து அலரிமாளிகையில் இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும்

கைச்சாத்திடப்படவுள்ளது.

முக்கிய ராஜதந்திரமட்ட பேச்சுவார்த்தையுடன் வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, விவசாயம், விஞ்ஞானதொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பிலும் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் பாகிஸ்தான் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாகவும் இவ் வருடத்தில் இலங்கைக்கு சர்வதேச தலைவர் ஒருவர் விஜயம் செய்யும் முதல் முறையாகவும் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

Popular

More like this
Related

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம்...

2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, தரம்...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...