கொவிட்-19 நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு இந்த அனுமதியை வழங்கி இருப்பதாக அமைச்சர் எஸ் எம் சந்திரசேன தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் குறிப்பிட்டதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.