தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டம் சற்றுமுன்னர் ஆரம்பம்

Date:

தமிழ்தேசியப்பரப்பில் இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளும்,வடகிழக்கில் இருக்கக்கூடிய கிறிஸ்தவ ஆயர்கள், ஆதினமுதல்வர்கள், மற்றும்
சிவில்அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலந்துரையாடல் வவுனியா இறம்பைக்குளம் தேவாலயத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

இதில் ஜெனிவாஅமர்வு தொடர்பாகவும், தமிழ்த்தேசிய பேரவை உருவாக்கம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

கூட்டத்தில் தமிழரசுகட்சியின் தலைவர் மாவைசேனாதிராயா,எம். எ.சுமந்திரன்,
ஈபிஆர்எல்எப்சார்பில் சுரேஸ்பிரேமசந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன், ரெலோதலைவர் செல்வம் அடைக்கலநாதன்,வினோநோகராதலிங்கம்,ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி,மட்டக்களப்பு
பாராளுமன்றஉறுப்பினர்களான கருணாகரம்,சிறிதரன்
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வேலன்சுவாமிகள், திருகோணமலை ஆயர் நோயல் இமானூவேல், மான்னார் ஆயர் இமானுவேல் பர்ணாண்டோ, யாழ்மறைவாட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம்தென்கையிலை ஆதினம் குருமுதல்வர் அகஸ்தியர்அடிகளார்,திருமூலர் தம்பிரான் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை கூட்டம் ஆரம்பமாகிய நிமிடம்வரை தமிழ்தேசியமக்கள் முண்ணனி, அனந்திசசிதரன், சிறிகாந்தா, சி.வி.விக்கினேஸ்வரன் தலமையிலான கட்சிகளை சேர்ந்த எவரும் சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நிருபர் 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...