உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் போயிங் 777 விமான சேவைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்று நண்பகல் முதல் இந்த விமான சேவை இடைநிறுத்தம் அமுலுக்கு வருவதாக போயிங் 777 உற்பத்தியாளர்களான அமெரிக்க நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து 231 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 777 ரக விமானம் ஒன்றின் இயந்திரம் ஒன்றில் தீ பற்றிக் கொண்டதாலேயே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட விமானம் உடனடியாக மீண்டும் தரையிறக்கப்பட்டு பயணிகள் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஜப்பானின் விமான சேவைகள், தென் கொரிய விமான சேவை என்பன உற்பட உலக நாடுகள் பல போயிங் 777 விமானங்களின் சேவைகளை உடனடியாக நிறுத்தி உள்ளன. குறிப்பிட்ட விமானங்களின் என்ஜின்கள் குறித்து தீவிர விசாரணைகளும் சோதனைகளும் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன. அவை முடியும் வரை அவற்றின் சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.