கனகராஜன்குளத்தில் செல் மீட்பு

Date:

வவுனியா கனகராஜன்குளம் – மன்னகுளம் – குஞ்சுக்குளம் பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மற்றும் ஆர்பீஜி செல் ஒன்றையும் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தனியாருக்குரிய தோட்ட காணியொன்றினை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது தொடர்பாக நேற்று குறித்த பகுதிக்கு அருகாமையிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவம் மற்றும் பொலிசார் மண்ணிற்குள் புதையுண்ட நிலையில் காணப்பட்ட வெடிபொருட்களை மீட்டுள்ளதுடன், அதனை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா 
நிருபர் துவாரகன்

Popular

More like this
Related

இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

-லத்தீப் பாரூக் இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...

உலக எழுத்தறிவு தினம் இன்று: உலகளவில் எழுத்தறிவு 88%ஐ எட்டியது; இன்னும் படிப்பறிவு இல்லாத 739 மில்லியன் மக்கள்.

சர்வதேச எழுத்தறிவு தினம் அறிவிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் (60 ஆண்டுகள்) நிறைவடைந்துள்ள...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வருகை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகப்பூர் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று...