கிராமசேவகர் இடமாற்றம். அரசியல் கட்சி தலையீடு என பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Date:

வவுனியா ஓமந்தை மருதங்குளம் கிராமசேவகர் இடமாற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டது.
மருதங்குளம் கிராமசேவகர் காரியாலயத்தின் முன்பாக காலை9 மணிக்கு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கருத்து தெரிவித்த பொதுமக்கள்.
கிராமசேவகர் நியமிக்கப்பட்டு இரண்டரை வருடங்கள் கூட பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பாக மாற்றப்படுகின்றார். அவர் எமது கிராமசேவகர் பிரிவில் சிறப்பான முறையில் இரவு பகல் பாராது நேர்மையாக பணியாற்றியுள்ளார்.
எமது கிராமத்தில் கிரவல் அகழ்வு பணியில் ஈடுபடும் தனிப்பட்ட ஒருவரிற்காக சில அரசியற்கட்சிகளின் செல்வாக்கினை வைத்துக்கொண்டு அடாத்தான முறையில் இவர் மாற்றப்படுவதை ஏற்கமுடியாது. தனிப்பட்ட ஒருவர் மண் அகழ்வதற்கு கிராமசேவகர் அனுமதி வழங்காத காரணத்தாலேயே அவர் மாற்றப்படுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
ஒருநபருக்காக கிராமசேவகர் மாற்றப்பட்டால் சாதாரண மக்களின் நிலையை பாருங்கள்.
எனவே அவரை மாற்றுவதற்கான உறுதியான காரணத்தை எமக்கு தெரிவிக்கவேண்டும். அவரை மீளவும் நியமிக்கும்வரை வேறு எந்த கிராம சேவகரையும் இங்கு கடமையாற்ற அனுமதிக்கமாட்டோம்.
ஊருக்குள் ஏற்கனவே கிரவல் அகழ்ந்து பல கிடங்குகள் உருவாகியுள்ளது. அவற்றை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களால் வீதிகளும் பாழடைந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்களுக்கு உபதேசம் உங்களுக்கு இல்லையா? , பிரதேச செயலகம் மக்களுக்காகவா அல்லது மக்கள் பிரதேச செயலகத்திற்காகவா? , எங்கள் கிராம உத்தியோகத்தர் எங்களுக்கு வேண்டும். போன்ற பல்வேறான வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

வவுனியா

Popular

More like this
Related

நாகரிக அரசியல் செய்யும் விஜய்: காதர் மொய்தீன் பாராட்டு!

இந்திய முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீனை முதல்வர் விஜய்...

வரலாறு படைக்கும் கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம்

கஹட்டோவிட அல் பத்ரியா மகா வித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற...

இலங்கையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ‘பௌத்த – முஸ்லிம் உரையாடல்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH-ல்

இலங்கையில் பல சமய, மத நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தும்...

அதிவேக வீதியின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் ரம்புக்கனை முதல் கலகெதர வரையான பகுதியின் நிர்மாணப்...