கொழும்பு − டாம் வீதி சடலம் | கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார் | சந்தேகநபர் சடலமாக கண்டெடுப்பு

Date:

கொழும்பு − டாம் வீதியில் பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணிண் சடலம் மற்றும் சந்தேகநபர் தொடர்பான தகவல்களை பொலிஸ் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தினபுரி − குருவிட்ட பகுதியைச் சேர்ந்த பகுதியை 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

ஹங்வெல்ல பகுதியிலுள்ள வாடி வீடொன்றிற்கு பெண்ணொருவருடன் கடந்த 28ம் திகதி செல்லும் குறித்த சந்தேகநபர், மார்ச் 01ம் திகதி சந்தேகநபர் மாத்திரம் பயணப் பையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து வெளியேறுயுள்ளதாகவும் விசாரணைகள் கண்டறியப்பட்டுள்ளது.

CCTV ஊடாக நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே சம்பவம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொழும்பு − டாம் வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 1ம் திகதி பயணப் பையொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பயணப் பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஹங்வெல்ல பகுதியிலிருந்து புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ் ஒன்றிலேயே இந்த சடலத்தை சந்தேகநபர் கொண்டு வந்துள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.

UPDATE…………………………………………..

பெண்ணின் சடலம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

படல்கும்புர பகுதியில் குறித்ர நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டிற்கு அருகிலுள்ள மரமொன்றில் தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலத்திற்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

51 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...