சௌபாக்கியா உற்பத்தி கிராம நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிப்பு!

Date:

அரசின் வறுமைஒழிப்பு செயற்த்திட்டத்திற்கமைய உள்ளூர்உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சௌபாக்கியா உற்பத்திகிராம நிகழ்ச்சித்திட்ட ஆரம்பநிகழ்வு வவுனியா மணிபுரம் கிராமத்தில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான கு.திலீபன், நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

குறித்த திட்டத்தின் கீழ் வவுனியாவில் 10 கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு கிராமத்திற்கும் 15 இலட்சம் ரூபாயநிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் மேலதிக அரச அதிபர், தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், மற்றும் நிகழ்சிதிட்டப்பணிப்பாளர் பொதுமக்கள், பயனாளர்கள் கலந்துகொண்டனர்.

வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...