தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தொன்று தொடர்பிலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.