இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை : வெளிவிவகார அமைச்சு தகவல்!

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து இலங்கை இராஜதந்திர தூதரகங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு, இது தொடர்பான முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது:

ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்பட்டால், பொதுமக்கள் தூதரகங்களைத் தொடர்புகொள்வதற்காக பிரத்யேக அவசர தொலைபேசி இலக்கங்கள் (Hotlines) தற்போது நிறுவப்பட்டு வருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு இதுவரையில் பாரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகள் வெளிவிவகார அமைச்சோடு தொடர்ச்சியான தொடர்பில் உள்ளனர்.

தேவையான அவசர தொலைபேசி இலக்கங்கள் விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...