நீர்ப்பாசன செழிப்பு கிராமிய குளங்கள் புனரமைப்பு திட்டம் மடு பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பித்து வைப்பு

Date:

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களின் சௌபாக்கிய கொள்கையின் கீழ் நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்    ‘நீர்ப்பாசன செழிப்பு’ எனும் 5000 கிராமிய விவசாயக் குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பிரகாரம் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண  நிகழ்வு இன்று சனிக்கிழமை (13) காலை  இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 138 குளங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய  மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  ஊமையார் துவரம் குளம் புனரமைப்பிற்கான அங்குராப்பண  நிகழ்வு  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் சூமஸ்தான் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஏ. ஸ்ரான்லி டிமேல், மடுப் பிரதேச செயலாளர் , மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர், விவசாய உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்திற்காக சுமார் 8.6 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.குறித்த வேலைத் திட்டத்தின் பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து வேலைத் திட்டத்தை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...