ஹஜ்ஜுல் அக்பர் ஏன் கைது செய்யப்பட்டார் | DIG அஜித் ரோஹண!

Date:

இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களை முன்னெடுத்தமை தொடர்பில் ஜமா-அத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் வஹாபிசம் மற்றும் ஜிஹாத் தொடர்பான கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் தெமட்டகொடை பகுதியில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல – முருதவெல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பவராவர்.

ஜமா – அத்தே இஸ்லாமிய அமைப்பினால் வெளியிடப்படும் ‘அல் ஹஸனாத்’ சஞ்சிகையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அடிப்படைவாத எண்ணங்களை தோற்றுவிக்கும் வகையில் குறித்த சந்தேக நபர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

மேலும் இவர் மாவனெல்ல புத்தர் சிலை உடைப்பு விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர் என்பது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் தொடர்ச்சியாக கருத்துகளைத் தெரிவித்து வந்தமை மற்றும் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பியமை தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணை உட்படுத்தப்பட்டுள்ளார் என்றார்.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...