பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ | ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக சேதம்

Date:

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பீதுறுதாலகல மலை காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.

நேற்று (01) மாலை பரவிய தீ காரணமாக குறித்த காட்டுப்பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் வரையான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாராவது விஷமிகள் தான் இப்பகுதிக்கு தீ வைத்திருப்பதாக நுவரெலியா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீயை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் விமானப் படையினரின் உதவி பெறப்பட்டு ஹெலிகொப்டர் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியும் கிடைத்தமை குறிப்பிடதக்கது.

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...