முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி முறிகள் விநியோக வழக்கு தொடர்பிலேயே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பில், சட்ட மாஅதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் 29 மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெற்றதாக கூறப்படும் முறிகள் விநியோக கொடுக்கல் வாங்கல் மோசடி குறித்த விசாரணைகள் விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.