அமெரிக்காவில் கொவிட் நான்காவது அலை தாக்குதல் ஒன்று ஏற்படலாம் என அமெரிக்க சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து வரும் கொரோணா வைரஸ் அமெரிக்காவில் சுகாதாரத் துறையினருக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
தற்போது தடுப்பூசி வழங்கும் திட்டம் மக்கள் மத்தியில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையிலும் கொவிட் பரவலும் அதன் வேகமும் சுகாதாரத் துறையினரை திணற வைத்துள்ளது. அண்மைக்கால கொவிட் பரவல் தரவுகள் தன்னை பெரும் கவலை அடைய வைத்துள்ளதாக அமெரிக்க நோய் கடடுப்பாட்டு மற்றும் தடுப்புப் பிரிவின் தலைவி தெரிவித்துள்ளார். தினசரி புதிய நோயாளர்கள் 70 ஆயிரம் வரை கண்டு பிடிக்கப்படுகின்றனர்.
தினசரி இடம்பெறும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை தாண்டி உள்ளது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொவிட் தடுப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கும், அமெரிக்க மக்களின் நலன்களுக்கும் உருமாற்றம் பெற்று வீரியம் அடைந்து பரவி வரும் கொரோணா வைரஸ் பெரும் சவாலாக மாறி உள்ளதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.