இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கிய இடமாக உள்ளது

Date:

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளது. எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.
மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும் யாத்திரிகர்களுக்கான தங்குமிட விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை (11) மாலை   சுற்றுலா துறை அமைச்சின் ஏற்பாட்டில் மடு பிரதேசத்தில் இடம் பெற்றது.
இந்திய அரசின் நன்கொடையின் கீழ் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 144 வீடுகளை கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு அமைக்க  மேற்படி அடிக்கள் நாட்டி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்த பின் உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
உலகமே கோவிட்-19 தொற்றினால் முடங்கியுள்ள நிலையில் பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் பாரிய  முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றறோம்.
இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை மிக நெருக்கமாக பேணி வருகின்றோம்.வீட்டுத்திட்டங்களை வழங்கியதுடன்,சுகாதார துறைக்கும் பங்களிப்பை மேற்கொண்டுள்ளோம்.
உதாரணமாக சுவசெரிய அம்புலன்ஸ் வண்டிகளை இலங்கைக்கு வழங்கி உள்ளோம்.
இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பில் இந்திய அரசாங்கம் மகிழ்ச்சி அடைகின்றது என அவர் தெரிவித்தார்.
 இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் செயல் படுத்தப்பட்ட நிலைமாற்று வீடமைப்புத்திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க , பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,காதர் மஸ்தான், கே.திலீபன்,இலங்கைக்கான இந்திய துணைதூதுவர் எஸ்.பாலசந்திரன் , உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)

Popular

More like this
Related

முடியும் தறுவாயில் அமெரிக்கா – ஈரான் போர்: டிரம்ப்

அமெரிக்கா - ஈரான் இடையே போர் முடிவுக்கு வரும் தறுவாயில் இருப்பதாக ...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த 236 ஈரான் கடற்படையினர் நாடு திரும்பினர்

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின் மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும்...

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...