இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

Date:

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற குழுவினர் அங்கு திட்டமிடல் பணிப்பாளரிடம் மகஜரை கையளித்தனர்.

மன்னார் சமூக மேம்பாட்டு அபிவிருத்தி நிறுவனம், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், இரணைதீவு மக்கள் இணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளனர்.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பிரதேசம் பொருத்தமற்ற பிரதேசம் என்பதை விளங்கிக்கொண்டு அரசாங்கம் அதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயம் குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...