கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் | அச்சத்தில் மக்கள்

Date:

கிளிநொச்சி விளாவோடை பகுதியில் யானைகள் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் தாம் அச்சத்தில் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாவோடை பகுதியில் இவ்வாறு யானைகள் அட்டகாசம் புரிந்துள்ளன.
அக்கிராமத்தில் பாரிய அளவில் விவசாயத்தயே தமது தொழிலாக கொண்டுள்ளனர்.
தற்போது யானைகள் அங்கு வர ஆரம்பித்துள்ளன எனவும் இதுவரை காலமும் வராத யானனைகள் எவ்வாறு திடீரென வந்தது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் அடர்ந்த காடுகளும் இல்லாத நிலையில் எவ்வாறு இந்த யானைகள் வந்தன எனவும் தமது பயிர் நிலங்களையும்,தென்னைமரங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிித்துள்ளனர்.
உரிய விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களமும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு, தமது வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி தருமாறு மக்களால் குாரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...