கொழும்பு − சங்கராஜ மாவத்தை பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மூன்று தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
உணவகத்தின் சமையலறையில் ஏற்பட்ட வெடிப்பே, இந்த தீ பரவலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு மருதானை உணவகமொன்றில் பாரிய தீ − ஒருவர் பலி
Date:
