கொவிட் தடுப்பூசி மருந்தினை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது. தொழிற்சாலைகள் பலவற்றிலும் ஏனைய இடங்களிலும் நோய் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் அதை சமாளிக்கும் வகையில் தனியார் பிரிவுக்கும் தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக நாட்டின் தொழிலாளர் பிரிவுக்கு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வசதிகள் அரசாங்கத்திடம் தற்போது இல்லாவிட்டால் தனியார் பிரிவின் பங்களிப்பு பெறப்பட வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் தொழிற்சங்கத் தலைவர் உபுல் றோஹன வேண்டுகோள் விடுத்துள்ளார்.