கொவிட் தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்கள் கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்ய தீர்மானம்

Date:

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அமைச்சரவை பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.

கொவிட் தொற்றில் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை பொறுப்பேற்று, அடக்கம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இரணைதீவுக்கு உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவீனங்களையும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அமைச்சரவை பேச்சாளர் உறுதியளித்துள்ளார்.

உடல்களை அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை எட்டியதில், அரசாங்கம் தலையீடு செய்யவில்லை எனவும், சுகாதார தரப்பினரே அதற்கான தீர்மானத்தை எட்டியதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

Popular

More like this
Related

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர்...

இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கும் அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்!

அவுஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways), மெல்போர்ன் – கொழும்பு இடையிலான...

எல் நினோ தாக்கம் தீவிரம்: 74 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34% ஆக வீழ்ச்சி

நாட்டில் அநேகமான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 74...