ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி ஊடாக இன்று (13) பிற்பகல், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
அபிவிருத்தி பணிகள் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொவிட் தொற்று காரணமாக எதிர்நோக்கியுள்ளதாக சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் அயல் நாட்டு கொள்கையில், இலங்கைக்கே முக்கியத்தும் வழங்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.