நாட்டில் எரிவாயுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பயறு, தானியங்கள், பெரிய வெங்காயம் மற்றும் சிவப்பு வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் மற்றும் எரிவாயு ஆகியவற்றிற்கு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் பிரதமர் கவனம் செலுத்தினார்.