பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி தோட்ட முகாமையாளர்கள் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

Date:

மஸ்கெலியா ஓல்டன் தோட்ட முகாமையாளரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் தடவையாக தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் இரு மருங்கிலும் பதாதைகளை காட்சிபடுத்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் முகாமைத்துவத்திற்கும் இடையில் ஏற்பட்ட தொழில் பிணக்குகளையடுத்து தொழிலாளர்கள் இரண்டு வாரங்களுக்கு மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கடந்த 10 திகதி தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்கப்படவில்லை. சம்பளம் பின் வழங்கியமைக்கும் குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும் கோபம் கொண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளர்கள் மற்றும் உதவி முகாமையாளர் தாக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே தோட்ட முகாமையாளர்கள் இன்று (03) ஹட்டன் மல்லியைப்பூ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் ´தோட்ட அதிகாரிகளுக்கு எதிரான வன்முறையினை நிறுத்து,´பெருந்தோட்டத்தை இலக்கு வைத்து செய்கின்ற கொடூர தாக்குதல்களுக்கு தண்டனை வழங்கு´, பெருந்தோட்டத்தின் முதுகெலும்பான பெந்தோட்ட சேவையாளர்களை பாதுகாப்போம்´, போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை காட்சி படுத்தியவாறு வலது கையில் கறுப்பு பட்டி அணிந்து, கறுப்பு கொடிகளை தமது வாகனங்களிலும், கையிலும் காட்சி படுத்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் சுகாதார பொறிமுறைக்கமைய அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த வழக்கு இன்று (03) ஹட்டன் நீதி மன்றில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...