மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு பிரதமரிடமிருந்து ஆலோசனை

Date:

மகா சிவராத்திரி தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான அமைச்சரும், கௌரவ பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான திணைக்களத்திற்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கியமான விரத தினங்களில் ஒன்றான மகா சிவராத்திரி இம்முறை 2021 மார்ச் மாதம் 11 ஆந் திகதி அனுட்டிக்கப்படவுள்ளது.
மகா சிவராத்திரி தினத்தை இந்துக் கோயில்களில் மிகவும் சிறப்பான வகையில் ஏற்பாடு செய்வதற்கு உற்சாகமூட்டுமாறு பிரதமர் அவர்கள் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்களுக்கான திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையில் இந்து பக்தர்கள் அதிகம் வாழும் பிரதேசங்களிலுள்ள செயலாளர் பிரிவுகளை முன்னிலைப்படுத்தி விசேட இந்து சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. மேலும் இந்துசமயக் குழந்தைகளுக்கு கோயில்களில் மகா சிவராத்திரியின் மகிமையை உணர்த்துதல் மற்றும் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

Popular

More like this
Related

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ...

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்: உலக இஸ்லாமிய சமூகத்திற்கான சவூதியின் அர்ப்பணிப்பு

இம்ரான் ஜமால்தீன் உலக முஸ்லிம் சம்மேளனத்தின் இலங்கைகான பிரதிநிதி   சவூதி அரேபியா இன்று உலக...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (22) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி,...

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி விதிப்பால் தள்ளுபடி விலையை வழங்குவதில் சிக்கல்!

புத்தகங்களுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத பெறுமதி சேர் வரி(VAT) வாசகர்களுக்குத் தள்ளுபடி...