கொழும்பு − கிரான்பாஸ் − கஜீமா தோட்டத்தில் பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ இன்று அதிகாலை 2.40 அளவில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 50திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.