கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் பாரிய தீ | 50திற்கும் அதிக வீடுகள் சேதம்

Date:

கொழும்பு − கிரான்பாஸ் − கஜீமா தோட்டத்தில் பரவிய பாரிய தீயினால், பல வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ இன்று அதிகாலை 2.40 அளவில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டிருந்த சுமார் 50திற்கும் அதிகமான தற்காலிக வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், கிரான்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Popular

More like this
Related

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...

துருக்கியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

துருக்கிக்கான இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒன்றிணைந்து, சிங்கள...

மாற்றியமைக்கப்பட்ட வாகனப் பதிவு எண்களை பயன்படுத்துவோருக்கு கடும் எச்சரிக்கை!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழக்கமான வாகனப் பதிவு இலக்கங்களுக்குப் பதிலாக,...