சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே 31இல்

Date:

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி ஆரம்பமாகும் என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
பாட்டலி சம்பிக்க ரணவக்க 2016ம் ஆண்டில் அமைச்சராகப் பதவி வகித்த போது இரவு நேரத்தில் ராஜகிரிய பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றை ஓட்டிச் சென்று விபத்துக்கு உள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் மேசமான காயங்களுக்கு ஆளாயினர். அவர்களுள் ஒருவர் இன்னமும் நடமாட முடியாத வகையில் சக்கர நாற்காலியில் முடங்கி உள்ளார்.

இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முன்னாள் அமைச்சர் சார்பில் அன்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டமை பின்னர் தெரிய வந்தது. அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட புதிய விசாரணைகளை அடுத்து சம்பிக்க ரணவக்க குற்றவாளியாகக் காணப்பட்டு அவருக்கு எதிரான குற்றப் பத்திரிகை கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்தக் குற்றப்பத்திரம் சம்பந்தமான பூர்வாங்க ஆட்சேபனை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 27ம் திகதி நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்படும் என்றும் வழக்கு விசாரணை மே மாதம் 31ம் திகதி தொடங்கும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...