திருகோணமலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் கார் மோதி ஒருவர் பலி

Date:

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார், 5ஆம் கட்டைப் பகுதியில் வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த கே.அந்தோனிசாமி (48 வயது) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...