நாளை முதல் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய தயாரிப்புக்களுக்கு தடை

Date:

பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனுடன் தொடர்புடைய ஆறு தயாரிப்புக்களின் பயன்பாடு மற்றும் தயாரிப்புகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுகின்றது.

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தி எறியப்படுகின்ற பொலித்தீன்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியன இத்தடைக்குள் வருகின்றன.

சிறிய போத்தலும் நாளை முதல் இலங்கையில் பயன்பாட்டுக்கும் உற்பத்திக்கும் தடைக்குள்ளாகின்றது.

20 மைக்ரோனுக்கும் குறைந்த லஞ்ச் ஷீட்ஸ், உணவு மற்றும் ஒளடதம் இல்லாத செஷே பைக்கட்டுக்கள் வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாத கொட்ன் பட் மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் ஆகியனவும் இத்தடையில் உள்ளடங்குவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினினும் தற்போது வர்த்தக நிலையங்களில் கையிருப்பில் உள்ள தொகை நிறைவடையும் வரை அவற்றை விற்பனை செய்ய முடியும். அவ்வாறான வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்படாத போதும் அவை இந்நாட்டில் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டவையா என்பது குறித்து இந்நிறுவனங்கள் அவ்வப்போது சோதனைக்குட்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர, நாளாந்தம் சேர்க்கப்படும் நகர்ப்புற கழிவுகளில் நூற்றுக்கு 5.9 வீதமானவை பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்கள் என தெரிவித்தார்.

நாட்டிற்குள் ஒரு நாளில் 400 தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மாதமொன்றிற்கு நாட்டில் 1250 தொன் பெற் போத்தல் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 250 தொன் மாத்திரமே மீள் சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

இலங்கையின் மொத்த பிளாஸ்டிக் மீள் சுழற்சி நூற்றுக்கு 15 முதல் 20 வீதத்திற்குள் காணப்படுகிறது. நாளொன்றுக்கு 232 தொன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் 30 இலட்சம் தொன்களும் அதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் பாரியளவிலும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதன் காரணமாக நாளை முதல் பிளாஸ்டிக்குடன் தொடர்புடைய 6 தயாரிப்புக்களை இலங்கையில் பயன்படுத்துவதற்கும் அதனை தயாரிப்பதற்கும் தடை விதிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...