ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வி என்ற கொவிட்-19 தடுப்பூசியை அவசரத் தேவைகளின் அடிப்படையில் இலங்கையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்கமைப்பு அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கி உள்ளதாக மருந்து உற்பத்திப் பொருள்கள் விநியோகத்துக்கு பொறுப்பதான இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவினால் கண்டு பிடிக்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசியான ஸ்புட்னிக் வி தற்போது உலகில் 19 நாடுகளில் பாவிக்கப்பட்டு வருகின்றது. இறுதிப் பரிசோதனைகளின் போது இந்த தடுப்பூசி 91.6 வீத வெற்றியைக் கண்டுள்ளதாகப் பதிவாகி உள்ளது.