வைத்தியர் வீட்டில் அட்டகாசம் செய்த மர்மநபர்கள்!

Date:

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் வசிக்கும் வைத்தியர் ஒருவரது வீட்டிற்குள் புகுந்த இனம் தெரியாத நபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நேற்றயதினம் இரவு குறித்த வைத்தியரின் வீட்டிற்குள் இரும்பு கம்பிகளுடன் நுளைந்த நான்குநபர்கள் வைத்தியரையும் அவரது மனைவியையும் தாக்கிவிட்டு, அவரதுஇரண்டு தொலைபேசிகள், மோட்டார்சைக்கிள்திறப்பு, மற்றும் சிறுதொகை பணத்தினையும் எடுத்துசென்றுள்ளதுடன் ரகசிய கண்காணிப்பு கமராவின் சேமிப்பகத்தையும் தூக்கிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த வைத்தியர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வவுனியா துவாரகன்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...