மாகாண சபை தேர்தலுக்கு முன் அரச பங்காளி கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும்

Date:

மாகாண சபை தேர்தலை நடத்தவதற்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும்.

கூட்டணிக்குள் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சி தலைவர்கள், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் ஆகியோர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

முரண்பாடுகளுடன் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டால் பெறுபேறு சாதகமாக அமையாது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

காலவரயறையின்றிய வகையில் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பழைய தேர்தல் முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்தும் அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டது.

சமர்ப்பிக்கப்பட்ட யோசனை குறித்து அமைச்சரவை மட்டத்தில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மாறாக கட்சி தலைவர் கூட்டத்தில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமர்ப்பித்த யோசனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தலை நடத்த அமைச்சரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

மாகாண சபையில் எல்லை நிர்ணய விவகாரம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது. இதற்கு தீர்வு காணாமல் தேர்தலை நடத்துவது பயனற்றது.

எல்லை நிர்ணய பிரச்சினை, மாகாண சபை தேர்தல் முறைமை ஆகிய இரு விடயங்களை முன்வைத்து அமைச்சரவை கூட்டத்தில் மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனை தொடர்ந்தே கட்சி தலைவர் கூட்டத்தில் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண யோசனை எட்டப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் ஆளும் கட்சிக்கும் அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும், ஏனைய பங்காளி கட்சிகளுக்கும் இடையில் கருத்து வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வை காண்பது அவசியமாகும்.

பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு கூட்டணியை பலப்படுத்த பங்காளி கட்சிகளுக்கும், பொதுஜன பெரனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் வாரம் இடம் பெறவுள்ளது.

மாகாண சபை தேர்தலில் சுதந்திர கட்சியினர் தனித்து செல்வதாக சுதந்திர கட்சி உறுப்பினர்களும், சுதந்திர கட்சி தனித்து சென்றால் தமக்கு பாதிப்பு இல்லை என பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களும் போட்டித்தன்மையில் குறிப்பிட்டுக் கொள்வதை காண முடிகிறது.

அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்தே இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றோம்.

கூட்டணியின் ஒன்றினைப்பின் காரணமாகவே நாட்டு மக்கள் முழுமையான ஆட்சியதிகாரத்தை வழங்கியுள்ளார்கள்.

ஆகவே மாகாண சபை தேர்தலிலும் ஒன்றினைந்து போட்டியிடாமல் கூட்டணிக்குள் முரண்பட்டுக் கொண்டால் தேர்தலின் பெறுபேறு அரசாங்கத்திற்கு பாதகமாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...