இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர்!

Date:

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் சீனாவின் அதி உயர் பிரமுகர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனப் பாதுகாப்பு அமைச்சர் எப்போது விஜயம் செய்வார் என்பது பற்றிய சரியான திகதி இன்னும் வெளியிடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறெனினும் தமிழ் சிங்கள புத்தாண்டு நிறைவின் பின்னர் பின்னர் நிச்சயமாக சீனப் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் சீனாவிற்கான விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாடு முழுவதும் கனமழை: மண்சரிவு எச்சரிக்கை!

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழையின் காரணமாக, மலைப்பகுதிகளில், குறிப்பாக நிலச்சரிவு...

ஜனாதிபதி அநுரவுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர...

கடந்த 22 மணித்தியாலங்களில் கெஸ்பேவையில் 204 மி.மீ அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவு

கடந்த 22 மணி நேரத்தில் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மி.மீ...