துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித் அல்-கன்னூசியின் (Sheikh Rached Ghannouchi) உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்தும், அவர் சிறையில் எதிர்கொள்ளும் கடுமையான சூழல் குறித்தும் சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் (IUMS) தனது பலத்த கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் ஷேக் கலாநிதி அலி முஹியித்தீன் அல்-கறதாஃகி (Ali Al-Qaradaghi) விடுத்துள்ள அறிக்கையில்,
85 வயதான ஷேக் ராஷித் அல்-கன்னூசி சிறையில் மருத்துவ வசதிகளின்றியும், குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டும் வைக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கருத்துக்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிரான குரல்களுக்காக வழங்கப்படும் அநீதியான தீர்ப்புகளை ஒன்றியம் கடுமையாகக் கண்டிக்கிறது.
அவரது வயது மற்றும் மோசமடைந்து வரும் ஆரோக்கிய நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என துனிசிய அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவருக்கு முழுமையான மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும், அவரது உடல்நிலை குறித்த உண்மையான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“நீதி என்பது பிரிக்க முடியாத ஒரு பண்பு; அநீதி எந்தவொரு நாட்டிற்கும் சட்டத்திற்கும் பொருந்தாது.” கலாநிதி அலி முஹியித்தீன் அல்-கறதாஃகி, தலைவர் – சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம்.
