பொது சுகாதார ஊக்குவிப்பு பணியகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. இதுவரை மேல் மாகாணத்தில் மட்டும் முன்வரிசை சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 9 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு covid-19 Astra Zeneca முதலாவது சொட்டு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட உருமாற்ற கொரோணா தாக்கம் இவர்களில் எவருக்கும் இதுவரை ஏற்படவில்லை என்று சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை எதிர்காலத்தில் இவர்களுக்கு அவ்வாறான தாக்கம் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவுக்கு இவர்களுடைய உடலில் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தற்போது பரவிவரும் வீரியம் கொண்ட குரோனா தாக்கம் ஏற்பட்டாலும் கூட அது மிகக் குறைந்தளவான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகின்றது.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நடத்தி இருக்கின்ற ஆய்வுகளின்படி இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட வர்களின் உடம்பில் வீரியம் கொண்ட மற்றும் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி கூட ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் கட்டாயமான ஒரு விடயமாக தற்போது பார்க்கப்படுகின்றது. தடுப்பூசி தவிர இப்போதைக்கு கொரோணாவில் இருந்து தப்புவதற்கு வேறு வழி எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .