உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

Date:

 ‘தடுப்பூசி: சந்தேகம் களைவோம்… கொரோனாவை வெல்வோம்!’ பேட்டியில் கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் பலவற்றையும் களைகிறார் டாக்டர் A.B.ஃபரூக் அப்துல்லா…

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் வேலை செய்யுமா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், இந்தியாவில் தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் யு.கே வேரியண்ட் மற்றும் பிரேசில் வேரியண்ட் ஆகியவற்றுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வில், ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி யு.கே வேரியண்ட்டுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுவது தெரிகின்றது. எனினும் தென்னாப்பிரிக்க வேரியண்ட்க்கு எதிராக கிட்டத்தட்ட அனைத்து வேக்சின்களின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக உள்ளதைக் காணமுடிகின்றது. இன்னும் வேரியண்ட்டுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் திறன் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முந்தைய அலையில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளதா?

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அண்மையில் செய்த ஆராய்ச்சியில், ‘இந்தியாவில் ஒவ்வொரு நூறு கொரோனாத் தொற்றாளர்களில் 4.5 பேர் ஏற்கெனவே தொற்று அடைந்து மீண்டும் தொற்று அடைபவர்கள்’ என்கிறது. டென்மார்க்கில் 40 லட்சம் மக்களிடம் செய்யப்பட்ட ஆய்வில், ‘முதல் தொற்றின் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி இரண்டாவது முறை தொற்று ஏற்படுவதில் இருந்து 78.8% காக்கிறது’ என்பது தெரிந்தது. ஆனால், ‘இந்தப் பாதுகாப்பு 65+ வயதினருக்கு 47% ஆகக் குறைகிறது’ என்கிறது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அவசரக்கால முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து முன்பு சர்ச்சைகள் எழுந்தனவே?

ஸ்புட்னிக் தடுப்பூசியை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் உலகின் முதல் கொரோனாத் தடுப்பூசி என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார். உடனே மேற்கத்திய நாடுகள், ‘அறிவியல் ஆய்வுகள் ஏதுமின்றி எப்படி அறிவிக்கலாம்’ என்று கேள்வி எழுப்பின. கடந்த பிப்ரவரியில் மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது ரஷ்யா. அது, இந்தத் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 91.6% நோய் தடுக்கும் திறன் உள்ளது என்றும் உறுதி செய்தது. அர்ஜென்டினா, ஹங்கேரி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 15 நாடுகளில் இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை பிரத்யேகமாக 1,600 இந்தியர்களிடம் மூன்றாம் கட்ட ஆய்வு நிகழ்த்தப்பட்டு இதன் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை முழுமையாக சோதனை செய்த பின்பே நிபுணர் குழு இந்தப் பரிந்துரை செய்திருக்கிறது. எனவே இந்தத் தடுப்பூசியின் வரவு கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் இன்னொரு அஸ்திரமே!

நன்றி விகடன் 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...